கும்பகோணத்தில், அனைத்துலக இஸ்லாமிய தமிழ் 8ம் மாநாட்டில்,(16.2.2014) காரைக்கால் "கலைமாமனி" அல்ஹாஜ்.E. குல்முஹம்மது அவர்களுக்கு,45 வருட இசை சேவையை பாராட்டி, ரூ.10,000த்துடன் கூடிய சிறந்த இஸ்லமிய பாடகருக்கான "இசைச்சுடர்" விருது வழங்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஹாஜி.கமலுதீன், பாத்திமா முசாஃபர்,சீமாட்டி ஜியாவுதீன், இலங்கை,சிங்கை, மலேசியா பிரமுகர்கள் கலந்து கொன்டு பாராட்டினர்கள்

இசைவாணர்கள் வரிசையில்  “கலைமாமணி”, ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 43 வருங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டிஉள்ளதை பாராடுட்டும் வகையில் .கடந்த டிசம்பர் மாதம்  புது டில்லி பாரதிய சகித்ய அகடமி ,DR.அம்பேத்கர் தேசிய விருது  வழங்கி சிறப்பித்தது   இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கன்ட்,சட்டிஸ்கர், அஸ்ஸாம் உத்திரகான்ட், மனிப்பூர் மாநில அமைச்சர்கள் கலந்து கொன்டனர்.


காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,